கடவுளிடம் பேசுகிறேன் நான்!
August 12, 2012
சம்பாதித்த சில்லரைக் காசு சட்டைப்பையில்
சேகரித்த கட்டணக் காசு தோள்பையில்
சோற்றுக்கும் சாற்றுக்கும் ருசிவேண்டா பசிக்காசு
செல்லும்போது அறியாப்பெற்ற செல்லாக் காசு
அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம்!
பற்றாச் சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால்
பக்குவமாய் பேசி,பின் ஈடாகும் பொதுக்காசு!
ஒருகையில் சுயமாய் சம்பாதித்த காசு
மறுகையில் நம்பிக் கொடுக்கும் பொதுக்காசு
ஓட்டுக்கும் வேட்டுக்கும் காலில்விழும் காசு
ஓட்டுக்காக வேட்டிசேலைக்கும் வெட்டிக் காசு
பதவிக்கும் பேழைக்கும் விளம்பரக் காசு
பந்தலுக்கும் பந்திக்கும் நிறையதொந்திக் காசு
கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு
காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு
அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம்!
பொதுக்காசில் வீக்கம் அவன்காசில் ஏற்றம்!
இத்திரு நாட்டில் தூணிலும் துரும்பிலும்
ஏழையின் சிரிப்பிலும் மட்டுமல்ல இப்போது,
அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்
இருப்பவன் இடத்திலும் இருக்கிறானே இறைவன்!
அவனிடம் நான்நம் வெறுப்பைக் காட்டாமல்
இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம்!